Twitxy Saved

Ko Sesha

Verified account This account is verified. Learn more

@KoSesha

I bow only to Dharma and to those who live by them.
366 Following 3.8K Followers 2.2K Posts

Latest posts 5

Ko Sesha Verified account @KoSesha
தமிழ்ச் சமூகம் இன்று தனது மிகவும் நேசத்திற்குரிய குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது.

என்றும் எங்கள் நெஞ்சங்களில், சாலமன் பாப்பையா ஐயா 🙏
Ko Sesha Verified account @KoSesha
சிறந்த திரைப்படங்களை இயக்கியவர்கள் பலர். ஆனால், ஒரு தலைமுறை இயக்குநர்களுக்கு திரைப்படத்தின் இலக்கணத்தையே கற்றுக் கொடுத்த குருமார்கள் வெகு சிலரே.

திரு. கே. பாக்யராஜ் அவர்கள் அத்தகைய குருமார்களில் ஒருவர்.

திரைக்கதை என்றால் என்ன என்பதே பலருக்கும் தெளிவாக இல்லாத ஒரு காலகட்டத்தில், அதன் நுட்பங்களை ஒரு தலைமுறைக்கே கற்றுக் கொடுத்தவர் அவர்.

அவரது திரைப்படங்கள் மக்களுக்கு பொழுதுபோக்காகவும், பல எழுத்தாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பாடசாலையாகவும் அமைந்தன.

முக்கியமாக, சினிமாவை எளிய மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் சென்ற படைப்பாளிகளில் முதல் வரிசை படைப்பாளி பாக்கியராஜ் அவர்கள் ஆவார். அன்றாட மனிதர்களின் உறவுகளையும் உணர்வுகளையும் அவர்களுக்கே உரிய நகைச்சுவையோடு திரையில் படைத்தது அவரது தனித்துவம்.

இன்று தமிழ் சினிமா ஒரு மாபெரும் திரைப்படக் கலைஞரை மட்டும் இழக்கவில்லை. தனது மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவரையும் இழந்திருக்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரை நேசித்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி. 🙏
Ko Sesha Verified account @KoSesha
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு, ஒரு ஒரு இணையற்றத் திரைப்பட இயக்குநரின் மறைவு மட்டுமல்ல! அது ஒரு காலத்தின் மறைவு.

இன்று அவரைப் பற்றி நினைக்கும் போது, என் மனதில் தோன்றுவது ஒரு திரைப்பட இயக்குநரின் உருவமல்ல! கையில் கேமராவுடன் நின்ற ஒரு தமிழனின் உருவம். தன் மண்ணை நேசித்தவன். தன் மொழியை நம்பியவன். தன் மக்களின் கதைகளை உலகம் கேட்கச் செய்தவன்.

தமிழ் சினிமா மெட்ராஸின் ஸ்டூடியோ சுவர்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்றவர் அவர். வயல்களையும், வரப்புகளையும், கரிசல் நிலங்களையும் கதாப்பாத்திரங்களாக்கி, சாதாரண மக்களின் காதல், கோபம், வேதனை, மாண்பு ஆகியவற்றை கதைகளாக வடித்து, தமிழ் திரைப்பட உலகின் மைய மேடைக்கு அழைத்து வந்தவர்.

அவர் வெறும் கதைகளுக்குள் மட்டுமே நடமாடிய கலைஞர் அல்ல! தன் கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னவர். தமிழரின் அடையாளம், பண்பாட்டு வேர், சாதாரண மக்களின் கண்ணியம் ஆகியவற்றைப் பற்றிய அக்கறையை வாழ்நாள் முழுவதும் சுமந்தவர்.

பாரதிராஜா இன்று ரத்தமும் சதையுமாக நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய நிலைபெற்ற கண்களின் வழியேதான் இனி தமிழ் சினிமா கிராமியப் படைப்புகளை உருவாக்கும் என்பது, ஒரு கலைஞன் மரணத்திற்கு அப்பால் பெறும் பெரும்பீடம்!

அவர் உருவாக்கிய கதைகள் என்றும் நம்மோடு வாழும்.
தமிழ் இருக்கும் வரை,
நம் மண்ணின் கதைகள் சொல்லப்படும் வரை, பாரதிராஜாவும் நம்மோடு வாழ்வார்.

ஓம் சாந்தி. 🙏🏻
Ko Sesha Verified account @KoSesha
Heartiest congratulations to my fellow Indians on the historic return of the Leiden Plates, also known as the Anaimangalam Copper Plates, after nearly 300 years.

As a student of both history and cinema, let me tell you that there are brilliant stories of our civilisational past from the Anaimangalam Copper Plates, waiting to be told!

For - this is not merely the return of an artefact. It is the return of a civilisational treasure that records the administrative sophistication, maritime superiority and religious generosity of the Chola age.

The plates connect Rajaraja Chola, Rajendra Chola, Nagapattinam, Srivijaya and the great Buddhist vihara of Chudamani Vihara into one extraordinary historical frame.

They remind us that Tamil Nadu’s past was not inward-looking. It was global and cosmopolitan, yet deeply rooted in Dharma.

This is a proud moment for India. And a very special moment for Tamil Nadu indeed. @narendramodi