Twitxy Saved

TVK Ramesh

Verified account This account is verified. Learn more

@RameshOffcl

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் - Minister for Hindu Religious and Charitable Endowments (HR&CE) | திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் - Srirangam MLA.
Chennai whatsapp.com/channel/0029Vb… Joined September 2014
2.5K Following 58K Followers 14K Posts

Latest posts 5

TVK Ramesh Verified account @RameshOffcl
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்த இனிய தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் நலன் பெருகட்டும். புதிய வாய்ப்புகளும், தொழில் வளர்ச்சியும், வெற்றிகளும் நிறைந்த ஆண்டாக அமைய எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Happy Diwali!

May the festival of lights bring happiness, prosperity, good health and new opportunities to everyone. May this festive season mark the beginning of greater success, growth and prosperity in all your endeavours.

@CMOTamilnadu | @TVKVijayHQ
38 replies 183 reposts 1.2K likes 8K views View on X
TVK Ramesh Verified account @RameshOffcl
விவசாயிகளின் நலனே எங்கள் அரசின் முதன்மை நோக்கம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்தன.

கடந்த செப்டம்பர் 15 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் காத்திருப்புப் போராட்டத்தின்போது, விவசாயத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் நானும் நேரில் பங்கேற்று விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

தொடர்ந்து செப்டம்பர் 19 அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. செப்டம்பர் 20 அன்று போராட்டக் களத்திற்கே நேரில் சென்று விவசாயிகளைச் சந்தித்து, இடைத்தேர்தல் முடிந்த பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நிச்சயம் நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பதில் இந்த அரசு ஒருபோதும் பின்வாங்காது என்றும் உறுதியளித்திருந்தோம்.

அதன்படி, மீண்டும் கடந்த மாதம் அனைத்து விவசாய சங்கங்களையும் தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்கள் சந்திந்து நடத்திய பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் இறுதி செய்யப்பட்டு, விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, அவர்கள் பெற்ற கடனில் ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பது, விவசாயக் குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பது, தமிழக விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது என அனைத்திலும் விவசாயிகளின் உண்மையான நண்பராகவும், தோழராகவும், விவசாயக் குடும்பத்தில் ஒருவராகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

சொன்னதைச் செய்வோம்; விவசாயிகளின் நலனைக் காப்போம்!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயம் காப்போம்! விவசாயிகளைக் காப்போம்! தமிழ்நாட்டைக் காப்போம்!

@CMOTamilnadu | @TVKVijayHQ
14 replies 252 reposts 748 likes 6.8K views View on X
TVK Ramesh Verified account @RameshOffcl
பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்!

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி!

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.

ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது!

அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!

பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல!
இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

@CMOTamilnadu | @TVKVijayHQ
66 replies 1.1K reposts 3K likes 43K views View on X
TVK Ramesh Verified account @RameshOffcl
திருச்சி மாவட்டத்தில் நம் பகுதியை தூய்மையாக வைத்திருக்கும் 2,500 தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மதிய உணவும் இனிப்புகளும் வழங்கி, அவர்களுடன் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்.

அவர்களின் முகங்களில் மலர்ந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்த பாராட்டுகளும் மனதை நெகிழச் செய்தன.

நம் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் அன்பும் நல்லாசியும் ஒவ்வொரு உழைக்கும் கரங்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

நகரின் தூய்மைக்காக உழைக்கும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்! உங்கள் உழைப்பே நம் நகரத்தின் பெருமை! 🙏

-

This Diwali, we shared a special lunch and sweets with 2,500 sanitary workers of Tiruchirappalli District , who work tirelessly to keep our city clean.

The joy on their faces and their heartfelt appreciation deeply touched me. Their smiles were the most precious Diwali gift.

Inspired by the love and blessings of our Hon’ble Chief Minister, Thalapathy C. Joseph Vijay, our aim is to ensure that every hardworking hand feels valued, respected and cared for.

My heartfelt Diwali wishes to every sanitary worker. Your dedication is the pride of our city. Let us celebrate this festival with love, dignity and togetherness.

@CMOTamilnadu | @TVKVijayHQ
#Trichy
1:18