Twitxy Saved

Riythvika✨

Verified account This account is verified. Learn more

@Riythvika

southindian film actress
Tamil Nadu, India Joined November 2011
144 Following 188K Followers 2.8K Posts

Latest posts 5

Riythvika✨ Verified account @Riythvika
செழியன் சார் ❤️
என் முதல் படத்தின் கேமராமேன்
பாலா சார் இயக்கிய பரதேசி படத்தில் கருத்த கன்னி என்ற கேரக்டருக்கு இந்த பொண்ணு சரியா இருக்கும் என்று முதலில் செலக்ட் செய்தது செழியன் சார்தான்
அவரது கேமராவின் வழியாகத்தான் நான் இந்த தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானேன்
பரதேசி படத்தின் பயணம் என்றும் மறக்க முடியாத ஒன்று
செழியன் சாருடன் பணிபுரிந்தது சினிமா பற்றிய அவருடைய பார்வை தொலைநோக்கு தன்மை டெக்னிக்கல் வியூஸ் ஸ்க்ரீன் ப்ளே அண்டர்ஸ்டாண்டிங் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனக்கு அவர் மீது இருக்கும் மரியாதையும் நட்பும் அன்பும் ஒரு வரியில் சொல்லி விட முடியாது. செழியன் சார் அதிகம் பேச மாட்டார் அவரது புன்னகை மட்டுமே பேசும்.
டூ லேட் படத்தை ஏன் நீங்கள் எனக்குத் தரவில்லை என்று அவரிடம் சண்டை போட்டும், செல்லமாக கோபித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன், ஏய் ஏய் இரு உனக்கு ஒரு கதை வச்சிருக்கேன் கண்டிப்பா நம்ம படம் பண்ணுவோம்னு அடிக்கடி சொல்லுவார் உன்னை வைத்து ஒரு படம் டைரக்ட் பண்றேன்னு அடிக்கடி சொல்லுவார்.. எப்ப சார் என்ன வச்சு படம் டைரக்ஷன் பண்ண
போறீங்கன்னு கேட்டா சீக்கிரமா பண்ணிடலாம்னு ஒரு ஸ்மைலி ஓட ரிப்ளை பண்ணுவார். உலக சினிமா பற்றிய கூர்மையான பார்வை கொண்ட அற்புதமான கலைஞர்.
சார் இன்னைக்கு நீங்க எங்க கூட இல்ல, ஆனா உங்க விஷுவல்ல எடுக்கப்பட்ட அற்புதமான படங்களும் நீங்க எனக்கு கற்றுக் கொடுத்த சினிமாவின் நுணுக்கங்களும் என் கூட இருக்கு...மிஸ் யூ சார் ❤️ lots of love #cheziyansir @Rchezhi
0 replies 26 reposts 349 likes 26K views View on X