Twitxy Saved

Selvaperunthagai K

Verified account This account is verified. Learn more

@SPK_TNCC

Ex President, Tamilnadu Congress Committee,
Ex MLA - Sriperumbudur Constituency,
Former, CLP TN Assembly.
Chennai, India youtube.com/channel/UClgRN… Joined February 2017
461 Following 27K Followers 32K Posts

Latest posts 5

Selvaperunthagai K Verified account @SPK_TNCC
கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, தலைமைப் பண்பு, பொறுமை, அர்ப்பணிப்பு என பல கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மகேந்திர சிங் தோனி அவர்களின் புதிய பயணம் சிறக்க வாழ்த்துகள் !

மைதானத்தில் உங்கள் சாதனைகள் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும். பதவி மாறலாம், பொறுப்பு மாறலாம்; ஆனால் ரசிகர்களின் மனதில் உங்கள் இடம் என்றும் மாறாது !

#MSDhoni

@msdhoni
0 replies 8 reposts 67 likes 753 views View on X
Selvaperunthagai K Verified account @SPK_TNCC
மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட ஆயுளும், நல்ல உடல்நலமும் பெற்று, பொதுவாழ்வில் மேலும் பல உயரங்களையும் வெற்றிகளையும் அடைய வாழ்த்துகிறேன் !💐

@PChidambaram_IN
0 replies 8 reposts 103 likes 2.4K views View on X
Selvaperunthagai K Verified account @SPK_TNCC
விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாளில் வீர வணக்கம் செலுத்துவோம்.

ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி, விளிம்பு நிலை மக்களின் நில உரிமை, சமூக நீதி மற்றும் சுயமரியாதைக்காகக் குரல் கொடுத்த அவரது போராட்ட வரலாறு என்றும் போற்றத்தக்கது.

சமத்துவமும் சமூக நீதியும் நிறைந்த இந்தியாவை உருவாக்க அவரது கொள்கைகளையும், போராட்ட உணர்வையும் முன்னெடுப்போம்!
0 replies 5 reposts 17 likes 784 views View on X
Selvaperunthagai K Verified account @SPK_TNCC
இன்று 14.11.2026 கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பிரதமர், பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட நேரு அவர்களின் பிறந்தநாளில், அவரது சிந்தனைகளையும், தேசத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளையும் நினைவுகூர்வோம்.
1 replies 3 reposts 14 likes 1.1K views View on X
Selvaperunthagai K Verified account @SPK_TNCC
இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி, குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.

குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்ற உயரிய சிந்தனையை வலியுறுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

குழந்தைகளின் கனவுகள் நனவாகட்டும்! கல்வியும் சமத்துவமும் நிறைந்த இந்தியா உருவாகட்டும்!

#JawaharlalNehru #ChildrensDay