Twitxy Saved

SARAN

Verified account This account is verified. Learn more

@dirsaran

Creation
Egmore Nungambakkam, India Joined September 2017
258 Following 3.7K Followers 443 Posts

Latest posts 5

SARAN Verified account @dirsaran
youtu.be/ObJ_5Tp9f0I?si…

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களோடு இணைந்த என் அத்தனை திரைப் பாடல்களும் என்றென்றும் பசுமை ரகம் !
இது அவரது தயாரிப்பில் அவர் எழுதி நான் இயக்கிய இன்டிபென்டன்ட் பாடல் !
முகமூடிகளுக்கு முடிவுரை எழுதி கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பித்த புதிதில் படமாக்கப்பட்டது.
கடந்தகால காதலியைத் தேடி அலைபாயும் முப்பதுகளின் மத்தியில் உள்ள ஓர் இளைஞன் அவனின் பதின்ம வயது தெருக்களின் ஊடே ஒரு நடை பயில்கிறான் !
அவன் கண்களுக்கு மட்டும் தட்டுப்படும் அவள் அதே பதின்ம பருவத்தில் இருக்கிறாள். அவளை தரிசித்த நிகழ்வுகள் மீண்டும் அவன் முன் நிகழ்கின்றன !
பேசாத காதல் மட்டுமே சாகாத காதல் !
படப்பிடிப்பின் போது காட்சிகளை நேராகவே படமாக்கினேன் , ஆயினும் ஏனோ மனம் ஏனோதானோ என இருந்தது...பாடலில் என் டச் இல்லையே என இரவெல்லாம் புரண்டேன்.
படமாக்கப்பட்ட காட்சித் துண்டுகள் தொகுப்பிற்காக என் முன் நின்றன ! எடிட்டர் SG.சேகர் ஆவலுடன் காத்திருந்தார் . சரேல் என ஒரு மின்னலடித்தது மனதில் !
" சார் ! இது கடந்த காலத்தை பின்னோக்கும் காதல் கவிதை, எனவே அனைத்து காட்சிகளுமே ரிவர்ஸ் கியரில்தான் போக வேண்டும் . ஆரம்பிப்போமா ?" என்றேன் !
இந்த முடிவு பாடலை என் வரை புதியதாக்கி விட்டது... சாதாரணமாக இருந்த ஷாட்டுகள் எல்லாமே அசாதாரணமாகி விட்டன...
எனக்கும் ' ஜே ஜே ' மூடு வந்துவிட்டது. இரண்டு நாட்களாகவே ஆலாப் ராஜுவின் இசையும் குரலும் என் எண்ணங்களில் குறுக்கிட்டுக் கொண்டே இருந்ததன் விளைவே இந்தப் பதிவு ! இந்தப் பாடலோ பலரின் வாழ்க்கைப்பதிவு !
www.youtube.com Naam Nadandha Theruvil | Naatpadu Theral - 05 | Vairamuthu | Aalaap... A stroll in the street, where feet travels forward and mind travels...
SARAN Verified account @dirsaran
மதம் கடந்த பாடல் ! என்ன ஒரு காத்திரமான குரல்வளம் ! இந்த தங்கையின் மற்ற காணொளித் துணுக்குகள் அடேங்கப்பா ரகம் !
அகம் குளிர்ந்து வாழ்த்துகிறேன்.
instagram.com/reel/DfEvyUXSX…
www.instagram.com 𝕱𝖆𝖙𝖍𝖎𝖒𝖆𝖙𝖍 𝕽𝖎𝖟𝖆 (@riza_zakiyya) • Instagram reel
SARAN Verified account @dirsaran
நன்றி என்பது புராதனம்தான் ஆனாலும் அது புதிதும்தான்! ஆகவே என் 'வட்டாரம்' படத்தினை நினைவில் கொண்டு கவனப்படுத்தியமைக்கு நன்றி!

" பர்மா ! நீ குருபாதம் மாதிரி ஆகப்போறியா?"
" இல்ல , குருபாதமாவே ஆகப் போறேன் !"
💕Marees💕 Verified account @ItzmeMarees Oct 21
2006 தீபாவளி ரொம்பவே வித்தியாசமான ஒரு தீபாவளி! கேப்டன் விஜயகாந்தின் தர்மபுரி, அஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ, ஆர்யாவின் வட்டாரம், சரத்குமாரின் தலைமகன் என மொத்தம் 6 படங்கள் இந்தத் தீபாவளிக்கு வெளியாகின. இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷலான தீபாவளி என்பதற்கு இதுவே சாட்சி!

கேப்டன் தர்மபுரி

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் DMDK கட்சியை ஆரம்பித்து, முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு வெளியான படம் என்பதால், தர்மபுரி மீது அப்போதே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய பேரரசு, அந்தக் காலகட்டத்தில் Full ஃபார்மில் இருந்தார். அவரது நான்காவது இயக்கத்தில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், வழக்கமான பேரரசு பாணியிலான ஒரு மசாலா படம்தான். அவரது படங்களில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ, அத்தனையும் இதிலும் இருந்தன. இறுதியில் ஒரு டீசன்டான வெற்றியையும் பெற்றது.

அஜித்தின் வரலாறு — ஒரு லேண்ட்மார்க்!

மூன்று வருடங்களாகத் தொடர்ந்த சறுக்கல்களுக்குப் பிறகு, அஜித் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட காலகட்டம் அது. மிகவும் உடல் இளைத்து, பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான வரலாறு, அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

அதற்கு முன்பு வெளியான பரமசிவன், திருப்பதி ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. கண்டிப்பாக ஒரு ஹிட் தேவைப்பட்ட அந்தச் சூழலில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது. அஜித்தின் வித்தியாசமான நடிப்பு, திரைக்கதை, பாடல்கள் என அனைத்தும் சேர்ந்து வரலாறு படத்தை ஒரு லேண்ட்மார்க் பிளாக்பஸ்டராக மாற்றின. இன்றுவரை அஜித் நடித்த படங்களில், அவர் ஏற்ற நடனக் கலைஞர் கதாபாத்திரம் பலருக்கும் ஃபேவரைட்!

ஈ & வட்டாரம் — உண்மையான சர்ப்ரைஸ் படங்கள்!

இந்தத் தீபாவளியின் உண்மையான சர்ப்ரைஸ் படங்கள் என்றால், ஈ மற்றும் வட்டாரம் ஆகிய இரண்டையும் தாராளமாகச் சொல்லலாம்.

ஈ — காலத்தைக் கடந்த சினிமா!

ஈ படத்தில் அப்போதே மருத்துவ மாஃபியா, அதில் நடக்கும் சர்வதேசக் குற்றங்கள் எனப் பல விஷயங்களை ஜனநாதன் அவர்கள் மிகத் துணிச்சலாகக் காட்டியிருந்தார்.

ஜீவா மற்றும் பசுபதி ஆகியோருக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்திருக்க வேண்டிய அட்டகாசமான சினிமா இது. இன்றைய காலகட்டத்திலும் பேசப்பட வேண்டிய கதைக்களத்தைக் கொண்டிருந்தும், இந்தப் படம் ஒரு டீசன்டான வெற்றியுடன் தனது ஓட்டத்தைச் சுருக்கிக்கொண்டது என்பதுதான் வருத்தம்!

வட்டாரம் — ஒரு அண்டர்ரேட்டட் கல்ட் கிளாசிக்!

மற்ற தீபாவளிப் படங்களையெல்லாம் தாண்டி நின்ற ஒரு அட்டகாசமான சினிமா வட்டாரம். சரண் இயக்கிய படங்களிலேயே மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்று இதைத் தாராளமாகச் சொல்லலாம்.

பிரெஷ்ஷான நடிகர் தேர்வு, கதைக்களம், திரைக்கதை, அந்த உலகத்தை உருவாக்கிய விதம் என அனைத்திலும் அப்போதே மிகச் சிறப்பாக எழுதப்பட்ட படம் இது.

இத்தனை சிறப்புகள் இருந்தும், பெரிய அளவில் வெற்றி பெறாத படமாகவே வட்டாரம் அமைந்தது. ஆனால், இன்றுவரை இந்தப் படத்திற்கென ஒரு மிகப்பெரிய கல்ட் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதுதான் இதன் தனிச்சிறப்பு!

வல்லவன் — எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான சிம்புவின் வல்லவன், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனால், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களை எடுத்துக்கொண்டால், அது வேற லெவல்! இன்றுவரை அந்தப் பாடல்களுக்கெனத் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தலை மகன் — சரத்குமாரின் முயற்சி!

சரத்குமார் இயக்கி நடித்த தலைமகன் படத்தைப் பொறுத்தவரை, அந்தப் படம் அவருக்குப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது, இந்தப் படத்தை எத்தனை பேர் திரையரங்குகளில் பார்த்திருப்பார்கள் என்பதே கேள்விக்குறிதான்!

இந்தத் தீபாவளியின் இன்னொரு சுவாரஸ்யமான ட்ரிவியா!

ஈ, வல்லவன், தலைமகன் ஆகிய மூன்று படங்களிலுமே நயன்தாராதான் கதாநாயகி என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான விஷயம்!

அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்த நயன்தாரா, பின்னாளில் சிம்புவுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சைக்குப் பிறகும் மீண்டும் தமிழ் சினிமாவில் தனது இடத்தை வலுவாகப் பிடித்தார்.

இறுதியாக...

ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் ஒரே தீபாவளிக்கு வெளியான காலகட்டங்களில், 2006 தீபாவளியும் மறக்க முடியாத ஒன்று. ஆறு படங்கள், ஆறு விதமான கதைக்களங்கள், வெவ்வேறு எதிர்பார்ப்புகள், சில வெற்றிகள், சில ஏமாற்றங்கள், சில காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்கள்!

அதற்குப் பிறகு, ஒரே தீபாவளிக்கு இத்தனை படங்கள் வெளியாகும் சூழல் படிப்படியாகக் குறைந்தது.
View quoted post on X
4 replies 10 reposts 61 likes 2.3K views View on X
SARAN Verified account @dirsaran
தேனிசைத் தென்றல் தேவா என்றதுமே அண்ணாமலை படப்பிடிப்பின் முதல்நாள் நான் கவிதாலயா சார்பாக ஏவிஎம் அறையொன்றில் அவரைச் சந்தித்து வீடியோ பதிவு செய்தது ஞாபகத்தில் வருகிறது . கவிதாலயாவின் அனைத்து படங்களுக்கும் விளம்பர நிர்வாகப் பொறுப்பில் இருந்ததால் எனக்கு இந்த சந்தர்ப்பம் வாய்த்தது .
ஆர்மோனியம் திறந்து 'அண்ணாமல அண்ணாமல ஆச வச்சேன் உண்ணாமல' என்று பாடியபடியே டியூனை வாசித்தார்.அதுதான் முதல் விளம்பரமாக வெளியானது.
அதன் பின் ' கல்கி ' யில் கேபி சார் அவருடன் முதன்முறையாக இணைகிறார். அதில்
' எழுதுகிறேன் ஒரு கடிதம் ' என்ற பாடலைப் பாடும் போது சித்ரா அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு உருக்கமான டியூன் அது...
பிறகு என் முதல் படம்
' காதல் மன்னன் ' ல் ' மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா ' பாடலை பரத்வாஜ் இசையில் பாடினார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் என் முன்னிலையில் பதிவான அந்தப் பாடலை அன்று இரவு மிக்சிங் செய்த போது தேவா அவர்களின் குரல் டிராக் மட்டும் தவறுதலாக அழிந்து விட்டது. பரத்வாஜ் பதைபதைத்து போய் எனக்கே தெரியாமல் தேவா அவர்களைத் தொடர்பு கொண்டு பேச, இரவு இரண்டு மணிக்கு வந்து மீண்டும் அதே உற்சாகத்துடன் பாடிக் கொடுத்திருக்கிறார்.
அன்றைக்கு தேவா அவர்கள் படு பிசியான பெரிய இசையமைப்பாளர் ! இருந்தும் இன்னொரு புதுமுக இசையமைப்பாளருக்கு தேவா அவர்கள் தந்த மரியாதை அது.
ஹரிகரன் லெஸ்லி இசையமைப்பாளர்களாக அறிமுகமான என் ' மோதி விளையாடு ' படம் !
அதில் வரும் எழுச்சியூட்டும்
' மோதி விளையாடு நீ ' பாடலை தேவா அவர்கள் பாடியது மட்டுமில்லாமல் அந்தப்பாடலில் நடித்தும் கொடுத்தார் அதுவும் இரவு படப்பிடிப்புகளில் !
திறமையோடு இழைந்த எளிமை, பணிவு, உழைப்பு,கண்ணியம் அவரை உச்சத்துக்கு கொண்டு போய் வைத்திருக்கிறது!
அவர் வடிவமைத்த சூப்பர் ஸ்டார் முகப்பு இசைதான் இந்தியாவில் முதல்முறையாக ஒரு ஹீரோவுக்காகவே உருவாக்கப்பட்டு இன்று வரை பிரபலமாக இருக்கிற டியூன் !
அந்த ஆர்ப்பரிப்பான இசை அலை எழுந்தது இந்த தேவா என்கிற ஆழ்கடலில்தான் !
தேவா அவர்கள் மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாலும் அவரது இசை விழித்துக் கொண்டேதான் இருக்கும்! ஓம் சாந்தி .

youtu.be/7T4IVdKj2u0?si…

youtu.be/7ip9-ayGX4c?si…

youtu.be/ZP6y3F3GyFA?si…

youtu.be/f9-A2T2xNpU?si…
12 replies 124 reposts 710 likes 16K views View on X
SARAN Verified account @dirsaran
'வட்டாரம்' இந்த அக்டோபரில் 20 வயதை பூர்த்தி செய்கிறது!
இது உருவான காலம் என் கசங்கிய கசந்த நினைவுகளைக் கிளறுகிறது.'அறிந்தும் அறியாமலும்' படம் பார்த்துக் கவரப்பட்ட நான் பலத்த போட்டிக்கிடையில் ஆர்யா அவர்களை ஒப்பந்தம் செய்தேன். ஆகஸ்ட் ரிலீஸ் என்று சொல்லி ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் முயற்சியில் இருந்த போது திடீரென இயக்குநர் பாலாவிடமிருந்து 'நான் கடவுள்' படத்தில் நடிக்க ஆர்யாவுக்கு அழைப்பு வர அவர் சபலப்பட்டு அதை முடித்துவிட்டு வருவதாக கூற நான் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட, திரு.ஏ.எல்.அழகப்பன் நேர்மையாகச் செயல்பட்டு ஒப்பந்தப்படி வட்டாரம் படத்தை முடித்து விட்டுதான் 'நான் கடவுள்' படத்தில் ஆர்யா நடிக்க வேண்டும் என விவகாரத்தை முடித்து வைத்தார். இதற்குள் இரண்டு மாதம் ஓடி படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்க யத்தனிக்க ஏற்கெனவே பேசி வைத்திருந்த ரகுவரன் அவர்களோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஆபத்பாந்தவனாக திரு.நெப்போலியன் அவர்கள் கை கொடுத்தார். 'குருபாதம்' உயிரும் உடலும் பெற்றார். பிரச்னைகளுக்குப் பிறகு நடிக்க வந்த ஆர்யா 'பர்மா' வாகவே உருமாறி எந்த கல்மிஷமும் இல்லாமல் கலகலப்பாக என்னுடன் இணைந்தது எந்த ஹீரோவிடமும் இல்லாத தனித்தன்மை! ஆகஸ்டுக்கு வரவேண்டிய வட்டாரம் தீபாவளி போட்டியில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய படங்களால் தியேட்டர்கள் ஒப்பந்தப்படி காலைக்காட்சியாக சுருக்கப்பட்டு அல்லாடியது.தயாரிப்பாளராக எனக்கு அது பணத்தை வெல்லவில்லை ஆனால் இயக்குநராக இன்றுவரை ரசிக மனங்களை வென்று வருகிறது ! விக்கிபீடியாவில் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதை இப்போது கவனிக்கும் போது என் வடுக்கள் வருடிக்கொடுக்கப் படுகிற உணர்வு !

சிஃபி (Sify) இதழ், "சரணின் வட்டாரம் திரைப்படம் விறுவிறுப்பாக நகரும் ஒரு சுவாரசியமான, அதிரடி நிறைந்த மசாலா பொழுதுபோக்குத் திரைப்படமாகும். இயக்குநர் சரண், தமிழ் சினிமாவுக்குப் புதிதான துப்பாக்கிக் கடத்தல் பின்னணியைக் கொண்டு, இப்படத்தை நேர்த்தியாகப் படமாக்கி ஸ்டைலாக உருவாக்கியுள்ளார்" என்று எழுதியது.

கல்கி இதழில் லஜ்ஜாவதி எழுதுகையில், "அரிவாள்களுடன் ரௌடிகளைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, சரண் ஒரு வித்தியாசமான உலகத்தை ஸ்டைலாகக் காட்டியுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சினிசவுத் (Cinesouth), "முதல் பாதி சற்று மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி முழுவதும் அதிரடியும் வேகமும் நிறைந்து, சரணின் 'வட்டாரம்' படத்தை ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுகிறது" என்று எழுதியது.

சென்னை ஆன்லைன் (Chennai Online), "தமிழ் சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் மிகவும் புதுமையானது. தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளோ, கவனத்தைத் திசைதிருப்பும் காட்சிகளோ இல்லாமல் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. திரைக்கதை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் சரணின் சிறந்த படைப்புகளில் 'வட்டாரம்' ஒன்றாகத் திகழ்கிறது. அவரது முந்தைய படங்களை விட இதில் அதிக முதிர்ச்சியையும் சீரான தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டது.