Twitxy Saved

Arappor Iyakkam

Verified account This account is verified. Learn more

@Arappor

Official Twitter id of Arappor Iyakkam
Chennai, India donate.arappor.org Joined November 2015
359 Following 111K Followers 12K Posts

Latest posts 5

Arappor Iyakkam Verified account @Arappor
20 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
40 குடும்பங்களுக்கு பட்டா மற்றும் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டும், உரிய நிலம் கிடைக்காமல் தவித்து வந்த 130 குடும்பங்களின் நீண்டகாலப் பிரச்சினையில் தற்போது முதல் கட்டமாக 40 குடும்பங்களுக்கு பட்டா மற்றும் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு எடப்பாடி அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக அப்பகுதியில் குடியிருந்து வந்த 18 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக அரசு உறுதியளித்தது. இதனைத் தொடர்ந்து, 17.11.2006 அன்று 18 குடும்பங்கள் உட்பட சுமார் 130 விளிம்புநிலை குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியது. அப்போதைய வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னின்று பட்டா வழங்கினார்.

ஆனால், பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் குடியேற முயன்றபோது ஏற்பட்ட நில உரிமை தொடர்பான பிரச்சினை காரணமாக, பட்டா பெற்றும் அந்த மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பல ஆண்டுகளாக வீடற்ற நிலையில் அந்தக் குடும்பங்கள் தவித்து வந்தன.

இந்தப் பிரச்சினை குறித்து அறப்போர் இயக்கத்திற்கு 2021 இல் அம்மக்கள் தொடர்பு கொண்டனர். இதற்கான அரசாங்க ரீதியான தகவலை RTI மூலமாக தொகுத்தோம், அம்மக்களை 2022 இல் அவர்களின் வீடுகளுக்கும் பணிகள் மேற்கொள்ளும் இடங்களுக்கும் சென்று நேரில் சந்தித்தோம். முழு விவரங்களை தொகுத்து, அறப்போர் இயக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து 06.06.2022 அன்று சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தது.

இதனை தொடர்ந்து DRO, தாசில்தார், BDO என பல கட்ட சந்திப்பு, கடிதத்தின் தொடர்ச்சியாக, தற்போது 11.11.2026 அன்று சுமார் 40 பயனாளிகளுக்கு பட்டா மற்றும் உரிய குடியிருப்பு இடம் தற்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.K.இளம்பகவத் IAS அவர்கள் வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு நன்றி !

இது நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கும், தொடர்ந்து தீர்வு காண வலியுறுத்தி வந்த முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள முக்கியமான முன்னேற்றமாகும். எனினும், மீதமுள்ள குடும்பங்களுக்கும் விரைவாக பட்டா மற்றும் உரிய இடம் வழங்கி, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என அறப்போர் இயக்கம் அரசைக் கேட்டுக்கொள்கிறது. @district_salem
10 replies 183 reposts 617 likes 15K views View on X
Arappor Iyakkam Verified account @Arappor
அறப்போர் புகார் : 98 கோடி குற்றப்பத்திரிகை

அரசியல்வாதிகள் மீது கூட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிடலாம். ஆனால் ஊழல் செய்யும் IAS அதிகாரிகளை காப்பாற்ற ஒட்டுமொத்த சிஸ்டமும் எப்படி வேலை செய்கிறது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் இந்த வழக்கு.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கீழே வேலை செய்யும் பொது துறை செயலர் முதல் பிரதம மந்திரி மோடி அலுவலகம் வரை தாமதப்படுத்தி வழங்கப்பட்ட நீதிமன்ற விசாரணை அனுமதி. நாம் தொடர்ந்து வழக்கு தொடுத்து நீதிமன்றமும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி, IAS அதிகாரிகள் மீது நீதிமன்ற விசாரணை அனுமதியை பெற்றுள்ளோம்.

அறப்போர் தொடரும்!
8 replies 92 reposts 305 likes 7.9K views View on X
Arappor Iyakkam Verified account @Arappor
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலை உயரம் ஏறாமல் சாலைகளை தோண்டி போட வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி ஒப்பந்தங்களில் வெளிப்படை தன்மை கொண்டு வர செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அறப்போர் குழுவினர் மாநகராட்சி ஆணையர் திரு கௌரவ்குமார் IAS அவர்களை சந்தித்து மனு அளித்தோம்.

அவரும் சாலைகள் உயரம் ஏறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார். @mdu_corp
2 replies 28 reposts 77 likes 2.4K views View on X
Arappor Iyakkam Verified account @Arappor
பெருங்குடி பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கொட்டப்படும் குப்பைகள். அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குப்பை மேலாண்மை சட்டத்தை அப்பட்டமாக மீறி அரசே இப்படி குப்பைகள் கொட்டுவது நியாயமா??

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குப்பைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

@chennaicorp
6 replies 66 reposts 130 likes 4.3K views View on X
Arappor Iyakkam Verified account @Arappor
முன்னாள் அமைச்சர் வேலுமணி, 2 IAS அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் மீது 98 கோடி சென்னை கோவை மாநகராட்சி ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயார். இந்த நிலைக்கு வர நாம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ? நாம் தொடுத்த இந்த ஒரு வழக்கின் விளைவாக நாம் சந்தித்த 32 வழக்குகள் என்ன ? வீடியோவில் அனைத்தும்!

நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி!

To volunteer with Arappor, register here
arappor.org/become-a-volun…

To donate to Arappor, click here
donate.arappor.org
15:45